களிமண் மூட்டைகளில் சாலை பிரிப்பான் - விபத்து அபாயம்

களிமண் மூட்டைகளில் சாலை பிரிப்பான் - விபத்து அபாயம்

சாலை பிரிப்பான் 

மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தின் வழியாக, மயிலாடுதுறை கும்பகோணம் சாலை செல்கிறது. ரயில்வே மேம்பாலத்தில் ,சாலை நடுவில் சாலை பிரிப்பான் இல்லாததால் இம்மேம்பாலத்தில் விபத்தால் 10க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த மேம்பாலத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் ,சாலை நடுவே தடுப்பு அமைத்து இருவழிச் சாலையாக ஒத்திகை பார்ப்பதற்காக 500மீ தூரத்திற்கு சாலையின் நடுவில் களிமண் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். அந்த மூட்டையின் மீது இரவிலும் பகலிலும் ஒளிரும் தன்மை கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. தற்பொழுது மழைக் காலமாக இருப்பதால் களிமண் கரைந்து சாலையில் பரவினால் அதுவே மிகப் பெரிய விபத்தை ஏற்படுத்திவிடும். இதன் ஆபத்தை உணர்ந்து உடனடியாக களிமண் மூட்டைகளை மாற்றி மணல் மூடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு சில மூட்டைகள் மட்டுமே தவறுதலாக களிமண் மூட்டைகள் வைத்து விட்டதாகவும் மாற்றி மணல் முட்டைகள் அடுக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story