மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத நிறைவு நாள் பேரணி
மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத நிறைவு நாள் பேரணி நடந்தது.
மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பாக 35 வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடந்த 15.1.2024 முதல் 14.2.2024 வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாலையில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்பதை வலியுறுத்தி தலைக்கவசம் ( ஹெல்மெட் ) அணிந்து பிரமாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காவேரி நகரில் துவங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொடியசைத்து துவங்கி வைத்தார். சாலை விபத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1433 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 304 பேர் இறந்துள்ளதாகவும், 1559 பேர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டு சாலைபாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகை மற்றும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பாடல் வழியாக வாகனத்தில okகொண்டு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.