சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்பு மாத விழா அவசியம் குறித்து பேரணி. ஹெல்மெட் அணிந்து பயணித்து வரும் இருசக்கர வாகன ஓட்டிக்கு "ப்ளவர் பொக்கே" கொடுத்து பாராட்டு.
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி மயிலாடுதுறையில் வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி ஹெல்மெட் அணிந்து பயணித்து இருசக்கர வாகன ஓட்டிக்கு "ப்ளவர் பொக்கே" கொடுத்து பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா ஜனவரி 15-ஆம் தேதி முதல் பிப்.14-ஆம் தேதி வரை ஒரு மாதத்துக்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கலந்துகொண்டு ஹெல்மெட் பேரணியை தொடக்கி வைத்தார். இதில், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், போலீஸார் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகத்தினர் கலந்துகொண்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். முன்னதாக, சாலையில் ஹெல்மெட் அணிந்து வந்த முதல் இருசக்கர வாகன ஓட்டியை நிறுத்தி, அவருக்கு ப்ளவர் பொக்கே கொடுத்து பாராட்டு தெரிவித்தார். இதில், ஏடிஎஸ்பி வேணுகோபால் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Next Story