ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கக் கூட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின், மயிலாடுதுறை மாவட்ட முதல் பேரவை கூட்டம் நடந்தது.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் முதல் மாவட்ட பேரவை கூட்டம் மயயில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார் ,மாவட்ட செயலாளர் ஆதி ஜெயராமன் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத் தலைவர் ரமேஷ் கலந்து கொண்டு நிறைவுரையாற்றினார். ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் , அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும்.
பொதுமக்கள் நலன் கருதி மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி வழியாக காரைக்கால் வரை ரயில் சேவையை மத்திய அரசு துவங்க வேண்டும், ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் அனைத்து ஊராட்சி செயலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7,850 வழங்க வேண்டும், ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டத்தினை, புதிய தொழில்நுட்ப அடிப்படையில் ,மேம்பாடு செய்து, ஆறுபாதி ஊராட்சியில் உள்ள கழிவு நீர் குட்டையை, புனரமைத்திட வேண்டும், உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.