ரஷ்ய புரட்சி தினம் : செஞ்சட்டை சீருடை பேரணி
செஞ்சட்டை சீருடை பேரணி
ரஷ்ய புரட்சி நடைபெற்ற நவம்பர் 7-ஆம் தேதியான இன்றைய தினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உலக அமைதியை வலியுறுத்தி செஞ்சட்டை சீருடை பேரணி மயிலாடுதுறையில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கண்ணாரத்தெருவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் வரை சென்று பேரணி நிறைவடைந்தது தொடர்ந்து அங்கு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
Tags
Next Story