மயிலாடுதுறை தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
மயிலாடுதுறை அருகே செஞ்சி கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
மயிலாடுதுறை வட்டம் காளி ஊராட்சி செஞ்சி கிராமத்தில் உள்ள மெட்ரிக் தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில், மனிதனின் உடல் அமைப்பு, பாகங்கள், அதன் இயக்கங்கள், ரத்த நாளங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்தும், மூலிகைச் செடிகளின் மருத்துவப் பயன்கள், சொட்டுநீர் பாசனம் குறித்த கருவி, காற்றாலை இயங்குதல், மக்கும் குப்பை மக்கா குப்பையின் பயன்கள், மண்புழு உரம் தயாரித்தல், சாலை பாதுகாப்பு, ராக்கெட் தயாரித்தல், சோலார் சிஸ்டம், கடல் நீரை நன்னீர் ஆக்குவது, புவி வெப்பமயமாதல், பல்வேறு புவி சார்ந்த உயிரினங்கள் குறித்த விளக்கங்கள், மோட்டார் வாகன தயாரிப்புகள், தானியங்களின் பயன்கள், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவியல் சார்ந்த படைப்புகளை உருவாக்கி, மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தினர்.
கண்காட்சியை மணல்மேடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் ரமேஷ் தொடக்கி வைத்து பார்வையிட்டு, சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.