சேகுவேரா பிறந்தநாள் கூட்டம்
இளைஞர்களிடையே எழுச்சியை உருவாக்கத்தான் கருத்தரங்கம். கரூரில் நடைபெற்ற சேகுவேரா பிறந்தநாள் கூட்டத்தில் தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன் விளக்கம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்ட அரங்கில் மாவீரன் சேகுவேரா பிறந்தநாள் விழாவை, இளம்புலிகள் கருத்தரங்க நிகழ்ச்சியாக தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை. திருவள்ளுவன் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இளம் புலிகள் அணியின் துணைச்செயலாளர்கள் அறிவு தமிழன், தமிழ் முருகன், விஜயகுமார், தென் மண்டல செயலாளர் திரு வளவன், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, ஊடகப்பிரிவு செயலாளர் செந்தமிழன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நாகை. திருவள்ளுவன், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் தான் தமிழகத்தின் அரசியல் வரலாறு மாறியது. அதுபோல தமிழக வரலாற்றையும், இந்திய வரலாற்றையும், உலக வரலாற்றையும் மாற்றியது இயற்கை. எனவே, இளைஞர்களால் துவக்கப்பட்ட போராட்டம் எழுச்சியை எட்டியது என்ற அடிப்படையிலேயே, இளைஞர்களை நாம் தயார் படுத்த வேண்டும். அதற்காகவே இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.