சந்துக்கடையில் போலி மது விற்பனை

சந்துக்கடையில் போலி மது விற்பனை நடைபெறுவதால் உயிரிழப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க தேமுதிக ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

சந்துக்கடையில் போலி மது விற்பனை. உயிரிழப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க தேமுதிக ஆட்சியரிடம் புகார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று தேமுதிக மாவட்ட புறநகர் மாவட்ட செயலாளர் சிவம் ராஜேந்திரன் தலைமையில் வந்த தேமுதிக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளிக்க வந்தனர். அந்த புகார் மனுவில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் உண்மை நிலையை கண்டறிய வழக்கை சிபிஐ விசாரணைக்கு உடனடியாக மாற்ற மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நடக்கும் அனைத்து சாராய ஆலைகளும் ஆளும் கட்சியினரால் நடத்தப்படுகிறது. எனவே, அந்த ஆலைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக உத்தரவிட வேண்டும். கரூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி இரவு நேரங்களில் செயல்படும் சந்து கடையில் போலி மதுபான விற்பனை செய்யபடுவதால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு, கரூர் மாவட்டத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதை நடைபெறாமல் இருக்க தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் டாஸ்மார்க், கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனையை உடனடியாக தமிழக அரசு தடுக்க வேண்டும். தமிழக அரசின் துணையோடு தான் கள்ளச்சார விற்பனையும், கஞ்சா விற்பனையும் நடைபெறுகிறது. இதை உடனடியாக ஆட்சியர் தடுக்க வேண்டும். தமிழக அரசின் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். தமிழகத்தில் கள்ளச்சாராய இறப்புக்கு திமுக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story