கரூர் மாநகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பெருமழை கொட்டி தீர்த்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் புயல் மழை காரணமாக பெருத்த சேதம் ஏற்பட்டு, தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், மீண்டும் கடந்த இரு நாட்களாக தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பெருமழை பெய்ததன் காரணமாக, பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் நிவாரண பொருட்கள் அனுப்பி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சி சார்பில், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் சேர்ந்து ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான, பிஸ்கட், நாப்கின், தண்ணீர் பாட்டில், சப்பாத்தி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இன்று அனுப்பும் பணி மாநகராட்சி அலுவலகம் முன்பு துவங்கியது. பொருட்கள் ஏற்றப்பட்ட லாரியை வழி அனுப்பும் நிகழ்வில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், மாநகராட்சி ஆணையர் சுதா, மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோ கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியை அனுப்பி வைத்தனர்.
