செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு விவகாரம்?அண்ணாமலை விளக்கம்

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு- பின்புலத்தில் பிஜேபி-யா! பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை கரூர் அடுத்த சிந்தாயூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காத விவகாரத்தில் பிஜேபி பின் புலத்தில் உள்ளதாக கூறப்படுகிறதே! என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிக்கிறார்.

அவரது சகோதரர் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். கரூருக்கு இன்கம்டேக்ஸ் அதிகாரிகள் வந்தபோது கட்சி தொண்டர்கள் அவர்களையும் தாக்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கொடுத்தால், சாட்சிகளை அழித்து விடுவார் என கருதிய நீதிபதிகள் ஜாமீன் தர மறுத்துள்ளனர். இதில் எங்கே அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்க முடியும்? என கேள்வி எழுப்பினார் அண்ணாமலை.

Tags

Next Story