செந்தில்பாலாஜிக்கு நவ.6 வரை காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் அதிரடி

செந்தில்பாலாஜிக்கு நவ.6 வரை காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் அதிரடி

செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் காவலை நவம்பர் 6ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின்சார மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் செந்தில்பாலாஜி. கரூர் மாவட்டம் ராமேஸ்வர பட்டியை சேர்ந்தவர் செந்தில்பாலாஜி. இவர் கடந்த 2011,2015 ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது பணம் பெற்றுக் கொண்டு போக்குவரத்து துறையில் ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. பல முறை ஜாமின் கேட்டு முயற்சித்த போதும் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க தொடர்ந்து மறுத்து வந்தது. ஏற்கனவே அவருக்கு அக்டோபர் 20ஆம் தேதி வரை நீதிமன்றம் காவல் நீட்டிப்பு செய்திருந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் இன்று நவம்பர் 6ஆம் தேதி வரை செந்தில்பாலாஜியின் காவலை நீட்டிப்பு செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story