கடுமையான தண்டனை வேண்டும் - ஆதீனம் ஆவேசப் பேச்சு
தேசிக பரமாச்சாரியார்
மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடை, தந்தையை இழந்த குழந்தைக்கு கல்வி நிதி, உதவி வழங்குதல் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு நலத்திட்ட வழங்குதல் ஆகியவை திருவாவடுதுறை தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பொதுமக்களிடம் உரையாற்றிய அவர் மனிதன் பாவங்களுக்கு அஞ்ச வேண்டும் அப்பொழுதுதான் குற்றங்கள் நடைபெறாது தற்போது புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது மிகுந்த வேதனைக்குரியது இதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும், தண்டனைகள் கடுமையாக இருந்தால் குற்றங்கள் குறையும், குற்றங்களை குறைத்து இறை சிந்தனை எங்கும் மேம்படவேண்டும் என்று பேசினார்.