நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை கழிவு அகற்றம்

நவீன இயந்திரம் மூலம் பாதாள சாக்கடை கழிவு அகற்றம்

நவீன இயந்திரம் மூலம் அடைப்பு அகற்றம் 

மயிலாடுதுறை பாதாள சாக்கடை ஆள் நுழைவுத் தொட்டிக்குழாயில் நவீன இயந்திரம் மூலம் அடைப்பை எடுக்கும் பணி நடைபெற்றது.
மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் ஆங்காங்கே ஆழ்நுழைவுத் தொட்டிகளில் மணல் சேர்ந்து அடைத்துக் கொள்கிறது. கழிவுநீர் ஆள் நுழைவுத் தொட்டி மூலம் வெளியேறி துர்நாற்றம் வீசி வந்தது. இதை சரி செய்யும் வகையில் மனிதர்களை ஆள்நுழைவுத் தொட்டிகளில் இறக்கி அடைப்பை நீக்கி மண்ணை அள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. ஆள் நுழைவுத் தொட்டிகள் தூர்வாரப்படாததால் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது. தற்பொழுது கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள ரீசைக்கிளர் எனப்படும் நவீன இயந்திரம் ஆள் நுழைவுத் தொட்டிகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கி அதில் உள்ள மண்ணை வாரி சரி செய்யும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது மயிலாடுதுறையிலிருந்து ஆனந்ததாண்டபுரம் செல்லும் சாலையில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணியை நகர் மன்ற உறுப்பினர் ஜனதாரகு மற்றும் அதிகாரிகள் கண்காணித்தனர்.

Tags

Next Story