சுத்திகரிக்காமல் வாய்க்காலில் விடப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர்
மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடைதிட்டம் 2007ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவருகிறது. மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 35 வார்டுகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை பம்ப்பிங் ஸ்டேஷன்மூலம் மயிலாடுதுறை அருகே உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே சுத்திகரிக்கப்பட்ட நீரை புல் வளர்க்கும் திட்டத்தில் செயல்படுத்துவது என்று திட்டம் தீட்டப்பட்டது. நாளடைவில் அந்த திட்டம் கைவிடப்பட்டு கழிவுநீரை சுத்திகரித்து மாசு இல்லாத நீரை அருகே செல்லும் சத்தியவான் வாய்க்காலில் விட்டுவந்தனர். ஓரிரு ஆண்டுகளில் சுத்திகரிக்கப்படாமல் துர்நாற்றத்துடன் சத்தியவான் வாய்க்காலில் விடப்பட்டுவருகிறது. தற்போது சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை கிணறு மூலம் 24மணிநேரமும் சத்தியவான் வாய்க்காலில் விடப்படுகிறது. ஆறுபாதி கிராமத்தில் செல்லும் இந்த கழிவு நீரானது 10 கிமீ தூரத்திற்கு நிலத்தடிநீரை மாசுபடுத்தியும் 30க்கும்மேற்பட்ட கிராம மக்களுக்கு உடல் உபாதைகளையும் ஏற்படுத்திவருகிறது குறிப்பிடதக்கது. .