இஸ்லாமியர்கள் திமுகவை ஆதரிக்க கூடாது? அதிமுகவை ஆதரிக்க வேண்டும்?
கூட்டத்தில் பேசும் ஹாரூன் ரசீது
மயிலாடுதுறையில் அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து எடப்பாடி பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஹாரூன் ரசீது பேசினார் .
அவரது பேச்சை கேட்கவோ ரசிக்கவோ அதிமுகவினர் தயாராக இல்லை.. இடையிடையே மேள சத்தம் கேட்டு அவர் பேச்சு தடைப்பட்டதால் விரக்தியடைந்தார். ஹாரூன்ரசீது பேசும்போது, அதிமுகவுக்கு ஆதரவு பெருகி வருகின்ற நிலையில் அதிமுக பாஜகவுடன் கள்ள உறவு வைத்திருப்பதாக பேசுகிறார்கள் திமுக வினர். யார் கள்ள உறவு வைத்திருக்கிறார்கள்.
அதிமுகவின் ஆட்சிக்காலத்திலே பிரதமர் தமிழகத்திற்கு வரும்போது திமுகவினர் கருப்பு கொடி காட்டினார்கள். இவர்களது ஆட்சியிலே வெள்ள நிவாரணம் ரூ. 37 ஆயிரம் கோடி கேட்டும் வழங்காத பிரதம மந்திரி தமிழகத்திற்கு வரும்போது மோடியே திரும்பி போ என்று கருப்பு கொடி காட்ட தயாரா ஏன் இவர்கள் காட்டவில்லை. பாஜக கொண்டு வரும் கல்வி கொள்கைக்கு ஆதரிக்கமாட்டோம் என்றார்கள்,
ஆனால் அந்த கல்விக் கொள்கையில் உள்ளவற்றை இவர்கள் தமிழகப் படியில் சேர்ப்போம் என்கிறார்கள். சி ஏ ஏ வை அதிமுக ஆதரித்தது என்கிறார்கள் ஆனால் பொது சிவில் சட்டத்தை திமுக ஆதரித்ததே, ஏன் என்றார்.. எந்தக் கருத்தை அவர் பேசினாலும் அதை கேட்க அதிமுக தொண்டர்கள் தயாராக இல்லை . ஹாரூன் ரஷீத் பேசும்போது இடையிடையே தொடர்ந்து மேள சத்தம் கேட்டு தொந்தரவு செய்துவந்ததாலும் சிறிது நேரத்தில் தனது பேச்சு நிறுத்திவிட்டார்