நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
திமுக சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது
தமிழகத்திற்கு நீட்விலக்கு நம் இலக்கு ஜனாதிபதிக்கு 50 லட்சம் கடிதம் மயிலாடுதுறையில் திமுகவினர் துவக்கம் +2வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக்கல்லூரிக்கான இடம் கிடைத்துவந்தநிலை மாறி நீட் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும் என்ற நிலையை மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டுமுதல் ஏற்படுத்திவிட்டது. இந்த நீட் தேர்வுவை எழுதுவதற்குப் பயிற்சி பெற கட்டணமாக ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம்வரை செலவாகிறது. இதனால் ஏழை எளியவர்கள் மருத்துவக்கல்லூரியில் சேர்வது தடைபட்டுள்ளது, மருத்துவக்கனவு கண்டுவந்த பல மாணவர்கள் தற்கொலை செய்துவருகின்றனர். வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவக்கல்லூரியில் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நியமித்த ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துள்ளது நீட் தேர்வுக்கு அதிக செலவு செய்யவேண்டியள்ளது என தெரிவித்திருந்தது. இதனால் கடந்த 2021ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா சட்டமன்றத்தில் ஆளுனருக்கு அனுப்பி பல போராட்டங்களுக்குப் பிறகு அவரும் கையொப்பமிட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். நீட்விலக்கு மசோதாவின் முக்கியத்துவத்தை குடியரசு தலைவருக்கு உணர்த்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் நீட்விலக்கு நம் இலக்கு என்ற பெயரில் திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றுவருகிறது, மயிலாடுதுறை தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்ற முகாமில் மாவட்ட செயலாளர் நிவேதாமுருகன் தலைமையில் நீட் விலக்குக்கோரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்டோர் கடிதம் அனுப்பினர்.
Next Story