நரிக்குறவர் மாணவர்கள் 8 பேரில் ஆறு பேர் தேர்ச்சி

நரிக்குறவர் மாணவர்கள் 8 பேரில் ஆறு பேர் தேர்ச்சி

மயிலாடுதுறையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற நரிக்குறவர் மாணவர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து பெற்றனர்.


மயிலாடுதுறையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற நரிக்குறவர் மாணவர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து பெற்றனர்.
மயிலாடுதுறை பல்லவராயன்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் 6 மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். மயிலாடுதுறையை அடுத்த திருஇந்தளூர் ஊராட்சி பல்லவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பில் 100-க்கு மேற்பட்ட நரிக்குறவ சமுதாய குடும்பத்தினர் தங்கியுள்ளனர். இச்சமுதாய மாணவர்கள் அதேபகுதியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளியில் தங்கி 8-ஆம் வகுப்பு வரை பயிலுகின்றனர். அவர்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளையும் நீடு அறக்கட்டளை சார்பில் ஏற்படுத்தித் தந்ததுடன், அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் கல்லூரி மேல்படிப்பு வரை படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படுகிறது. இக்குடியிருப்பில் தங்கியுள்ள 8 மாணவர்கள் நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில் அவர்களில் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக வெண்ணிலா என்ற மாணவர் 357 மதிப்பெண்கள் பெற்றார். மேலும், அர்ஜீன், சக்தி, ஈஸ்வரன், சஞ்சய், தனலெட்சுமி ஆகிய மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இம்மாணவர்களுக்கு, நீடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயசுந்தரம், சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, ஆசிரியர்கள் மற்றும் நரிக்குறவ சமுதாய மக்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story