மாட்டு வண்டியில் மணல் கடத்தல் - வண்டிகள் பறிமுதல்.

மாட்டு வண்டியில் மணல் கடத்தல் -  வண்டிகள் பறிமுதல்.

பறிமுதல் செய்யப்பட மாட்டு வண்டி 

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவர் மீது வழக்கு பதிவு செய்து இரண்டு மாட்டு வண்டிகள், அரை யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரூர் காளியம்மன் கோவில் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக காவல் உதவி ஆய்வாளர் மனோகரன்க்கு தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில் அக்டோபர் 31ஆம் தேதி காலை 6 மணி அளவில் காளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த மண்மங்கலம் தாலுக்கா நெரூர் பகுதியைச் சேர்ந்த ராம்ஜி (25) என்பவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திரன் (25) என்பவரும் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு மாட்டு வண்டிகளையும், மாட்டுவண்டியில் இருந்த அரை யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும் வாங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

Tags

Next Story