கரையான் புற்றில் பதுங்கி இருந்த பாம்புகள்
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் தோட்டத்தில் கரையான் புற்றில் பதுங்கியகருந்த மூன்று பாம்புகள் பிடிக்கப்பட்டன.
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் தோட்டத்தில் கரையான் புற்றில் பதுங்கியகருந்த மூன்று பாம்புகள் பிடிக்கப்பட்டன.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் குமாரசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில், அதிக பாம்புகள் இருப்பது தெரிய வந்தது. குடியிருப்பை ஒட்டிய பகுதி என்பதால் அங்கிருந்து பாம்புகளை வெளியேற்ற தோட்டத்தில் உரிமையாளர் எவ்வளவோ முயற்சித்தபோது கரையான் புற்றில் புகுந்து மறைந்து கொள்கின்றன இதையடுத்து சீர்காழியை சேர்ந்த பாம்புப்பிடி வீரரான ஸ்நேக் பாண்டியன் வரவழைக்கப்பட்டார். அவர் பாம்புகள் மறைந்திருந்த இடத்தை கண்டுபிடித்தார். மறைந்திருந்த பாம்புகளை கரையான் புற்றில் தண்ணீரை நிரப்பி வெளியில் வர செய்தார். 6 அடி முதல் 7 அடி நீளத்தில் இருந்த 3 சாரை பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டார்.
Tags
Next Story