சமூக வலைதளங்களின் எதிரொலி - ஒருவர் கொலை !

சமூக வலைதளங்களின் எதிரொலி - ஒருவர் கொலை !

மீனா

மயிலாடுதுறையில் நடந்த கொலைக்கு இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட முன்னவிரோதம் என்பதால் இது குறித்து முகநூல் இன்ஸ்டாகிராம் பகுதியில் தகாத வார்த்தைமூலம் விமர்சனம் செய்து சமூக மோதலை ஏற்படுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் மீனாஎச்சரித்துள்ளார்.
மயிலாடுதுறையில் கடந்த 20.03.2024 அன்று இருசமுதாயத்தினரிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அஜித்குமார் கொலை சம்பவம் நடந்த நிலையில் இதுதொடர்பாக Instagram சமுக வலைதளத்தில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், இருசமுதாயத்தினரிடையே பிரச்சனையை தூண்டும் வகையில், வாசகங்கள் பதிவு செய்த மயிலாடுதுறையை சேர்ந்த 19 வயது நபர் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் சம்மந்தப்பட்ட 19வயது குற்றவாளி கைது செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இது போன்று பிரச்சனையை தூண்டும் வகையில் வாசகங்கள் பதிவு செய்தாலும், கருத்து தெரிவித்தாலும், பகிரப்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா எச்சரித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story