கரூரில் சவுத் ஜோன் அளவிலான ஸ்கேட்டிங் போட்டி
ஸ்கேட்டிங் போட்டி
கரூரில் நடைபெற்ற சவுத் ஜோன் அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் மாணவ- மாணவியர், பொதுப் பிரிவினர் உற்சாகமாக பங்கேற்பு. கரூரில், பிரதர்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகாடமி சார்பில், நான்காவது சவுத் ஜோன் லெவல் ஸ்கேட்டிங் போட்டி, கரூர் சின்னகோதூர் பகுதியில் உள்ள பிரதர்ஸ் இன்டர்நேஷனல் ரோலர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில், அமைப்பின் நிறுவனர் கலையரசி தலைமையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவ- மாணவியர் மற்றும் பொது பிரிவினர் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இந்த போட்டியில் 4,6, 8, 10, 12, 13 மற்றும் 14 வயதுக்கு மேற்பட்ட பொது பிரிவினர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.
போட்டியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறும் முனைப்போடு தங்களது திறன்களை வெளிப்படுத்தி ஸ்கேட்டிங் பாதையில் சறுக்கிச் சென்றதை கண்ட பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும், வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கைகளை தட்டியும், ஓசைகளை எழுப்பியும், வீரர்களின் முனைப்பை தீவிர படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.