மயிலாடுதுறை : புத்தாண்டு சிறப்பு திருப்பலி

மயிலாடுதுறை : புத்தாண்டு சிறப்பு திருப்பலி

சிறப்பு திருபலி

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் ஆங்கில வருடப் பிறப்பை முன்னிட்டு நடைபெற்ற திருப்பலியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்
மயிலாடுதுறையில் புனித பிரான்சிஸ் சவேரியார்ஆலுயத்தில் ஆங்கில வருட பிறப்பு கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது, உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.இதில் முன்னாள் எம்எல்ஏவும், திமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளருமான பில்அருட்செல்வன் கலந்து கொண்டு சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினார்ஆங்கில புது வருட சிறப்பு திருப்பலியில் 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story