கரூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

கரூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்கள் 

கரூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

கரூரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்பு. ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அமராவதி பாலம் அருகே அமைந்துள்ள திடலில்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட தலைவர் மதர்சா பாபு தலைமையில் நடைபெற்ற சிறப்பு தொழுகையின் போது ஆண்கள், பெண்கள் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகை மேற்கொண்டனர். இறைத்தூதரான நபியின் தியாகத்தை போற்றும் வகையில் உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினர்.

அதிகாலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து, அனைவரும் ஒன்று கூடி பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகையை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் இறைதூதர் அல்லாவின் சிறப்புகளையும், பக்ரீத் கொண்டாடுவதின் நோக்கத்தையும், குர்பானி அளிப்பதின் உன்னதத்தையும் விளக்கிக் கூறினார் மாவட்டத் தலைவர் மதர்சா பாபு.

Tags

Next Story