காந்திகிராமத்தில் ரமலான் சிறப்பு தொழுகை !
சிறப்பு தொழுகை
காந்திகிராமத்தில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ரமலான் மாதம் துவங்கியதில் இருந்தே நோன்பு வைத்து அல்லாவை தொழுது வந்த இஸ்லாமியர்கள் ரமலானுக்கான பிறை பார்த்த பிறகு ரமலான் நோன்பு கொண்டாடுவது வழக்கம்.
அதன் அடிப்படையில் இன்று ரமலான் நோன்பு கரூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கரூரை எடுத்த காந்திகிராமம் பகுதியில் செயல்படும் இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை பள்ளிவாசலில் இமாம் முகமது இஸ்மாயில் யூசுபி தலைமையில் இஸ்லாமியர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிவாசலின் தலைவர் நிர்வாகிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வை மனதில் நிலை நிறுத்தி தங்கள் நோன்பை நூற்றனர்.
கூட்டு பிரார்த்தனை முடிந்தவுடன் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரமலான் நோன்பு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.