மயூர நாட்டாயாஞ்சலியில் கண்கொள்ளாக் காட்சி

மயூர நாட்டாயாஞ்சலியில் கண்கொள்ளாக் காட்சி

நாட்டாயாஞ்சலி

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் நாட்டியாஞ்சலியில் கண் கொள்ளாக் காட்சிகள் அரங்கேற்றம்

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் நற்பணிகளை பாராட்டி சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் “மயூர நன்னெறி செம்மல்” என்ற விருதும், தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் நாட்டிய கலைஞர் கவிதா ராமு ஐஏஎஸ் அவர்களுக்கு “மணிமேகலை பொற்சதங்கை” விருதும் ஆன்மீக திருப்பணிகளை சிறப்பாக செய்து வரும் மயிலாடுதுறை சௌ.விஜயகுமார் அவர்களுக்கு “மயூர நற்பணி நல்லரசு” என்ற விருதும் வழங்கப்பட்டது.

ஆலங்குடி ஏவி பக்கிசாமி நாதஸ்வர குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கிய முதல் நாள் மயூரநாட்டியாஞ்சலியில் மலேசியா லாஸ்யா ஆர்ட்ஸ் அகாடமி குழுவினர், சென்னை அனுஷம் டான்ஸ் குரூப் டான்ஸ் குழுவினர், ஸ்ரீ ஞான முத்ரா குழுவினர், கோயம்புத்தூர் கிருஷ்ணபிரியா உள்ளிட்ட குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வுகளை ஏராளமான கலை அலுவலர்கள் கண்டு ரசித்தனர்.

சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை செயலாளர் மாயவரம் விஸ்வநாதன் நன்றி கூறினார். துணை செயலாளர் அகஸ்டின்விஜய் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இன்று மாலை ஆரம்பித்து விடியற்காலை வரை நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags

Next Story