ஸ்ரீ கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா- ஏராளமான பெண்கள் பங்கேற்பு

ஸ்ரீ கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா- ஏராளமான பெண்கள் பங்கேற்பு

சுவாமி வீதியுலா

கரூரில், கலைமலிந்த சீர்நம்பி ஸ்ரீ கண்ணப்ப நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு வள்ளி கும்மி மற்றும் பவள கும்மி நடனத்தில் பங்கேற்ற ஏராளமான பெண்கள். பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர்.

கரூரில், கலைமலிந்த சீர்நம்பி ஸ்ரீ கண்ணப்ப நாயனார் குருபூஜை விழாவை முன்னிட்டு வள்ளி கும்மி மற்றும் பவள கும்மி நடனத்தில் பங்கேற்ற ஏராளமான பெண்கள். பார்வையாளர்கள் பரவசம்.

திருக்காலத்தி நாதரை வணங்கி தன் கண்ணை சிவபெருமானுக்கு வழங்கி, உலகின் முதல் கண் தானம் செய்த பெருமையுடையவரும்,ஆறு நாட்களில் தொண்டு செய்து முக்தி பெற்ற 64 நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீ கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா இன்று அனைத்து சிவன் கோவிலிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில், கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கம் மற்றும் இளைஞர் அணி இணைந்து நடத்திய கலைமலிந்த சீர்நம்பி ஸ்ரீ கண்ணப்ப நாயனார் குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கரூரில்,பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு வாழ வந்தியாரின் கொங்கர் கலை பண்பாட்டுக் குழுவின் சார்பில் கண்ணப்ப நாயனாரின் திருவீதி உலா வருகையின்போது வள்ளி கும்மி மற்றும் பவளக் கும்மி ஆட்டம்,

பாரம்பரிய பண்பாட்டு பாடல்களுக்கு ஏற்றவாறு, பல்வேறு அசைவுகளை அமைத்து, பாரம்பரிய நடனத்தை ஒருசேர சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் , ஆண்கள், இளைஞர் மற்றும் இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் அபிநயம் பிடித்து ஆடிய நிகழ்வு பார்வையாளர்களை பரவசமடைய செய்தது. இது குறித்து தமிழ்நாடு வேட்டுவக் கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் வாழவந்தி நாடு சரவணன் தெரிவிக்கும் போது,

எங்களின் முன்னோர்கள் இறைவனை வணங்க 2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் பயன்படுத்திய பழமையான கலை தான் வள்ளி கும்மி மற்றும் பவளக் கும்மி நிகழ்வு என்றும்,

கண்ணப்ப நாயனரின் குருபூஜை விழாவில் இறைவன் சன்னதியில் நடைபெற்ற இந்த நிகழ்வு ஒட்டுமொத்த சமுதாயமும் வாழ்வில் எல்லா வளமும் பெறுவதற்கான வாய்ப்பாக கருதுகிறோம் என தெரிவித்தார்.

Tags

Next Story