கள்ளுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்- பாஜக வேட்பாளர் உறுதி

பொள்ளாச்சியில் கள்ளுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் பேட்டியளித்துள்ளார்.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தராஜன் தனக்கு பயிற்றுவித்த பள்ளி ஆசிரியருடன் வந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் - கள்ளுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் உறுதி.. பொள்ளாச்சி..மார்ச்..27 பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்த ராஜன் இன்று கோவை சாலையிலிருந்து நூற்றுக்கணக்கான கட்சி நிர்வாகிகளுடன் தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்திரின் சரண்யாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆனைமலையாறு நல்லாறு திட்டம் நிறைவேற்றுவதாக வாக்குறுதிகளை அளித்துவிட்டு இதுவரை நிறைவேற்றவில்லை வால்பாறை பகுதியை ஆனைமலை புலிகள் காப்பத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் வேர் வாடல் போன்ற நோய் தாக்குதல் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் வழங்க வேண்டும் என போராடும் விவசாயிகள் என தொடர்ந்து விவசாயிகளை கைது செய்யப்படுகின்றனர். நான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யும் பட்சத்தில் தேங்காய் எண்ணெயை நியாய விலை கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் தமிழகத்தில் டாஸ்மாக் கடையில் படிப்படியாக மூடப்படும் என்று சொன்ன திமுக அரசு தற்போது தனியார் மது கூடங்களை திறந்து வருகிறது தென்னை விவசாயிகளின் நலன் கருதி கள்ளுக்கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் இதன் மூலம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என தெரிவித்தார். வேட்பு மனு தாக்கல் செய்த போது உடன் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் சுகுமார், பாஜக மாவட்ட பார்வையாளர் மோகன் மந்திராச்சலம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் துரை ஆகியோர் உடன் இருந்தனர்.. இன்று வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர் வசந்தராஜன் தனக்கு ஆரம்ப கால பள்ளியில் கல்வி பயிற்றுவித்த பள்ளி ஆசிரியருடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story