அனுமதியின்றி எடுத்துச் செல்லபட்ட கற்கள் - லாரிகள் பறிமுதல்

அனுமதியின்றி எடுத்துச் செல்லபட்ட  கற்கள்  - லாரிகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட லாரிகள் 

பொள்ளாச்சி: ஆனைமலையை அடுத்த செம்மணம்பதி மற்றும் மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த லாரிகளில் தீவிர சோதனை மேற்கொண்டிருந்த நிலையில் கேரளா பதிவு எண் கொண்ட மூன்று டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டபோது உரிய அனுமதி சீட்டு இன்றி ஏழு யூனிட் சாதாரண கற்களை எடுத்து செல்வது தெரிய வந்தது. இதையடுத்து மூன்று லாரிகளையும் பறிமுதல் செய்த சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் அவற்றை ஆனைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மேலும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story