கரூரில் கடை முன்பு நிறுத்திய பைக்கை களவாடிய இருவர் கைது

கரூரில் கடை முன்பு நிறுத்திய  பைக்கை களவாடிய இருவர் கைது

காவல் நிலையம் 

கரூரில்,கடை முன்பு நிறுத்திய பைக்கை களவாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், வெங்கக்கல்பட்டி, செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கைலாஷ் குமார் வயது 30. இவர் டிசம்பர் 28ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கரூரில் உள்ள விநாயகா செல் சர்வீஸ் கடைக்கு சென்று, கடைக்கு முன் அவரது பைக்கை நிறுத்திவிட்டு, தனது வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் இரவு 9 மணி அளவில் வந்து பார்த்தபோது அவரது பைக் மாயமாகி இருந்தது.

அவர் டூவீலரை நிறுத்திய பகுதி முழுவதும் அவரது வாகனத்தை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் தனது டூவீலர் களவாடப்பட்டது அறிந்து, அது குறித்து கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் வ உ சி நகரை சேர்ந்த கார்த்திகேயன், அருந்ததியர் தெருவை சேர்ந்த அருண்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டபோது, பைக்கை களவாடியது அவர்கள் தான் என தெரியவந்தது.

எனவே காவல்துறையினர் இருவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags

Next Story