சட்ட விரோதமாக சாராய விற்பனை ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
மயிலாடுதுறையில் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட் டத்தில் மாவட்ட காவல் துறை மற்றும் மதுவிலக்கு காவல் துறையினரால் சட்ட விரோத மாக சாராய விற்பனையில் ஈடு படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 3023ஆம் ஆண்டில் 3,348 வழக்குகள் பதிந்து 3,396 குற்றவாளிகள் கைது செய்பட்டனர். அவர்க ளிடமிருந்து 1,42,705 லிட்டர் புதுவை மாநில சாராயம், 5,250 புதுவை மதுபாட்டில்கள் மற் றும் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட 8 நான்கு சக்கர வாகனங் கள், 125 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 133 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர் கள்ளசாராய விற்ப னையில் ஈடுபட்டு வந்த 25 நபர் கள்மீது தடுப்பு காவல் சட்டத் தின்கீழ் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.மேலும், சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 94 வாகனங்களை பொது ஏலம் விடப்பட்டு, ஏலத் தில் கிடைக்கப்பெற்ற தொகை யான ரூ.22,93,472 அரசு கணக் கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து சட்ட விரோதமாக சாராய விற்பனை யில் ஈடுபடுபவர்கள்மீது நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. சட்ட விரோ தமாக மது விற்பனை செய்ப வர்கள் பற்றி புகார் அளிக்க 96261-69492 எண் மூலமாக வும், வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல் அளிக்கலாம். மாவட் டத்தில் சட்டவிரோத மது விற் பனையில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.