தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் வேலை நிறுத்தம்

மயிலாடுதுறையில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்


மயிலாடுதுறையில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மயிலாடுதுறையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து msc / aif திட்டங்கள் மூலம் வழங்கப்படும் லாரிகள், சரக்கு வாகனங்கள், ட்ரோன்கள் , தேவையற்ற வகையில் கட்டப்படும் கட்டிடங்கள் ஆகியவை கடும் நட்டத்தை ஏற்படுத்துவதால் இதனை முற்றிலுமாக கைவிட வேண்டும் , குறைவான சம்பளத்தில் பணி செய்யும் பணியாளர்களை சொந்த ஊரில் அருகே உள்ள சங்கங்களுக்கு இடமாற்றம் செய்து தரும் எளிமையான முறையை உருவாக்கிட வேண்டும் , கூட்டுறவு தணிக்கையை விடுத்து சங்கங்களை பட்டய தணிக்கைக்கு அனுமதிக்க வேண்டும் , கூடுதல் பணி சுமையை குறைத்து பிப்ரவரி 2021 க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.

கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story