நண்பர்கள் பேசவில்லை என மாணவன் தற்கொலை

நண்பர்கள் பேசவில்லை என மாணவன் தற்கொலை

தற்கொலை

கரூர் மாவட்டம், காந்திபுரம் பகுதியில் கல்லூரி நண்பர்கள் தன்னிடம் பேசவில்லையே! விரக்தியில் தூக்கிட்டு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், வடக்கு காந்திகிராமம், முல்லை நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் ராஜகோபால் மகன் சேதுராமன் வயது 21. இவர் தாந்தோணி மலைப்பகுதியில் செயல்படும் அரசு கலைக் கல்லூரியில் எம் ஏ இங்கிலீஷ் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது கல்லூரி நண்பர்கள் தன்னிடம் பேசவில்லையே என்ற வருத்தத்தில் இருந்து வந்தார்.

இதனால் மன வேதனை அடைந்த கல்லூரி மாணவன் சேதுராமன், மார்ச் 7ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த சேதுராமனின் தந்தை ராஜகோபால், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சேதுராமனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story