பாரம்பரிய உடையில் பொங்கலை கொண்டாடிய மாணவர்கள்

கரூர் அருகே வெண்ணைமலை பரணி பார்க் கல்வி குழுமத்தில் நடந்த பொங்கல் விழாவில் மாணவர்கள் பாரம்பரிய உடையில் பங்கேற்று பொங்கலை கொண்டாடினர்.
கரூரை அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் பரணி பார்க் கல்வி குழுமத்தின் சார்பில், பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் மோகனரங்கன், செயலாளர் பத்மாவதி, முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த பொங்கல் விழாவில், பள்ளி மாணவ- மாணவியர்கள் பாரம்பரிய வேஷ்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினர். முதலில் பள்ளி வளாகத்தில் பொங்கல் பானையிட்டு, பொங்கலை சமைத்து பொங்கி வரும் வேளையில் "பொங்கலோ பொங்கல்" என கூறி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து பாரம்பரிய உடை அணிந்து பல்வேறு பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பாட்டிலில் நீர் நிரப்புதல், பலூன்களை பாதுகாத்தல்,பானை உடைத்தல் என பல்வேறு போட்டிகள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

Tags

Next Story