மது போதையில் மாணவர்கள் கலாட்டா; நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி

பொள்ளாச்சி அருகே கஞ்சா மற்றும் மது போதையில் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே கஞ்சா மற்றும் மது போதையில் கல்லூரி மாணவர்கள் ஊராட்சி மன்ற துணை தலைவரின் கணவரை தாக்கியதல் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி - போதை வஸ்துக்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு.. பொள்ளாச்சி.மார்ச்..19 பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவரான தேவிகாராணியின் கணவர் துரைசாமி இவர் இன்று புளியம்பட்டி நூலகம் வழியாக சென்று கொண்டிருந்தபோது மூன்று கல்லூரி மாணவர்கள் மது அருந்திவிட்டு கஞ்சாவை புகைத்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்..

பின்னர் அவர்களை கண்டித்த துரைசாமியை அந்த மாணவர்கள் கஞ்சா போதையில் அடித்து விரட்டியும் கல்லால் பலமாக தாக்கி உள்ளனர்.. மேலும் துரைசாமியை அந்த இளைஞனிடமிருந்து பாதுகாக்க சென்ற அப்பகுதியைச் சேர்ந்த பிரபு, கனகராஜ், ஆறுமுகம், ஆகிய மூன்று பேரையும் அந்த போதை இளைஞர்கள் தாக்கி உள்ளனர்.. இதில் படுகாயம் அடைந்த துரைசாமி உள்ளிட்ட நால்வரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

இச்சம்பவம் குறித்து புளியம்பட்டி பகுதி மக்கள் கூறுகையில் தங்கள் பகுதியில் அதிகப்படியான கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் புழக்கத்தில் உள்ளதாகவும் இப்பகுதியில் தனியார் கல்லூரியும் அரசு பள்ளியும் செயல்பட்டு வருவதால் இந்த தனியார் கல்லூரி மாணவர்கள் அதிகப்படியாக கஞ்சா மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வருவதாகவும் இதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும் தாக்குதல் நடத்திய அந்த கல்லூரி இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கஞ்சா போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்து எங்கள் பகுதியின் அமைதியை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர

Tags

Next Story