படித்த பள்ளிக்கு ரூ.15 கோடியை அள்ளிக்கொடுத்த மாணவர்கள்
கட்டட திறப்பு விழா
மயிலாடுதுறை திவான் பகதூர் ரங்காச்சாரியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் முன்னாள் மாணவர்களின் பொருளுதவியில் கட்டப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில், 1900ஆம் ஆண்டு துவங்கப்பட்டுகடந்த 123 ஆண்டுகளாக இயங்கிவரும், அரசு உதவி பெறும் திவான் பகதூர் ரங்காச்சாரியார் தேசிய மேல்நிலைப்பள்ளி புதிதாக ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. முழுவதும், இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் முன்னாள் ஆசிரியர்களின் பொருளுதவியால் இக்கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பல வகுப்புகளைக் கட்டி அளித்துள்ளனர். மூன்று மாடி கட்டிடத்தில் 70 வகுப்பறைகள் 5 பரிசோதனைக்கூடங்கள் என பிரம்மாண்டமான கட்டிடத்தின் திறப்பு விழா . பள்ளியின் தாளாளர் விஜயகுமார் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மகாபாரதி பள்ளியை திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றி சிறப்புரை ஆற்றினார். விழாவில், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர், நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், நகரமன்ற தலைவர் செல்வராஜ், மற்றும், பள்ளி ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், முன்னாள் மானவர்கள் மற்றும். பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Next Story