பெண்கள்,குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆய்வு கூட்டம்
ஆய்வு கூட்டம்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தங்கவேல் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த மாதாந்திர கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பதியப்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்புடைய வழக்குகளின் எண்ணிக்கை குறித்தும், நவம்பர் மாதம் பதியப்பட்ட வழக்குகளின் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகள் குறித்தும், Love Affair POCSO - ன் கீழ் பதியப்பட்ட வழக்குகள் குறித்தும், பள்ளிகளில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்துதல் குறித்தும், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதி மற்றும் நிவாரண நிதி வழங்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், குடும்ப வன்முறையில் இருந்து பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 2005 ன் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பெறப்பட்ட புகார்களின் குற்றப் பத்திரிகை கோப்பு மற்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட விவர அறிக்கை விசாரணை நிலை குறித்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா, தனி துணை ஆட்சியர் சைபுதீன்,தடய அறிவியல் உதவி இயக்குநர் பிரகாஷ், மாவட்ட சமூக நல பாதுகாப்பு அலுவலர் பார்வதி, குழந்தைகள் நலக்குழு தலைவர் மணிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.