கரூரில் தனியார் பள்ளி பேருந்துகள் தரம் குறித்து ஆய்வு

கரூரில் தனியார் பள்ளி பேருந்துகள் தரம் குறித்து ஆய்வு

பேருந்தில் தரத்தை ஆய்வு செய்த போலீசார்

கரூரில் தனியார் பள்ளி பேருந்துகள் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கரூரில்,தனியார் பள்ளி பேருந்துகள் தரம் குறித்து ஆய்வு. கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ளதால், பள்ளி மாணாக்கர்களை ஏற்றிச்செல்லும் வேன் மற்றும் பேருந்துகள் தரமாக உள்ளதா? என ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில், இன்று கரூர் மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம் ஆகியோர் பள்ளி பேருந்துகளை அதிகாரியுடன் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது பள்ளி வாகனங்கள் சுத்தமாக உள்ளதா? கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? ஜிபிஎஸ் கருவிகள், தீயணைப்பு கருவிகள், அவசர கால கதவுகள் சரியாக செயல்படுகிறதா? எனவும் முதலுதவி பெட்டி உள்ளதா? எனவும் ஆய்வு செய்தனர். கரூர் மாவட்டத்தில் 702 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், இன்று சோதனைக்கு 556 பேருந்துகள் உட்படுத்தப்பட்டது. இதில் 12 பேருந்துகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் அந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும், பள்ளி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் 10 ஆண்டுகள் அனுபவமிக்கவராக இருக்க வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அரசின் விதிமுறைகளுக்கு உட்படாத பேருந்து மற்றும் வேன்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story