வாழ்வாதார கோரிக்கைகளுக்கான மூன்று கட்ட போராட்டத்தில், திடீர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், வாழ்வாதார கோரிக்கைகளுக்கான மூன்று கட்ட போராட்டத்தில், திடீர் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில்,வாழ்வாதார கோரிக்கைகளுக்கான மூன்று கட்ட போராட்டத்தில், திடீர் ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், தங்களது வாழ்வாதார கோரிக்கைகளுக்காக, மூன்று கட்ட போராட்டம் நடத்துவது என மாநில மையத்தினால் தீர்மானிக்கப்பட்டு, இன்று தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரில், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து, உண்ணாவிரத போராட்டமும், வரும் 22 ஆம் தேதி அனைத்து பணிகளையும் புறக்கணித்து அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது எனவும், 27ஆம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானித்து, இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், சங்கத்தின் மாவட்ட தலைவர் வைரபெருமாள் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பொன்.ஜெயராம், மாநிலத் துணைத் தலைவர் செல்வராணி,மத்திய செயற்குழு உறுப்பினர் ஓபிஆர் செந்தில் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு, திடீரென தங்களுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய செயற்குழு உறுப்பினர் ஓபிஆர் செந்தில், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லது அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணை உடனே வெளியிட வேண்டும், இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதல் நிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை உடன் வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின், பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் அல்லது தனி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், எங்கள் சங்க மாநில மையத்தின் வழிகாட்டுதல் படி எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

Tags

Next Story