மயிலாடுதுறை பகுதியில் திடீர் பனிப்பொழிவு - விவசாயிகள் கவலை

மயிலாடுதுறை பகுதியில் திடீர் பனிப்பொழிவு -  விவசாயிகள் கவலை

நிலத்தடி நீர் பாசனம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக தொடர் மழை பெய்ததால், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுக்காகக்களில் 7500 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியது. மழைநீரால், பாதிக்கப்பட்ட பகுதிகளை, அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டுச் சென்றார். மயிலாடுதுறை, குத்தாலம் தாலுக்காக்களில், நிலத்தடிநீரைக் கொண்டுதான் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தற்பொழுது, பெய்த மழை போதிய அளவிற்கு இல்லை. இதனால் மீண்டும், நிலத்தடிநீரைக கொண்டு விவசாயப்பணிகளை, மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் மீண்டும் மழையை, எதிர்நோக்கியுள்ள இந்த வேளையில், விடிய விடிய பனிப்படர்ந்து பனிப்பொழிந்துவந்துள்ளது, மழை வருமா வராதா என்ற கவலையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.

Tags

Next Story