வயிற்று வலியால் அவதி - மாணவி தற்கொலை

காவல் நிலையம்
கரூர் அடுத்த வெண்ணைமலை அருகே உள்ள பெரிச்சிபாளையம், ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகள் அட்சயா வயது 19. இவர் தாந்தோணி மலைப் பகுதியில் செயல்படும் அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு பிஎஸ்சி புவியியல் பயின்று வந்தார். இதனிடையே அட்சயாவுக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டு வந்ததால், இது தொடர்பாக கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனாலும், அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த நிலையில் வாழ்ந்து வந்த அட்சயா, அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று இருந்த அவரது தாயார் மலர், வீடு திரும்பிய போது தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த அட்சயாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
