சுமங்கலிவரம் 108 திருவிளக்கு பூஜை !

சுமங்கலிவரம் 108 திருவிளக்கு பூஜை !

திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை அருகே மூங்கில் தோட்டம் கிராமத்தில் உள்ள ஶ்ரீ ராஜமாரியம்மன் ஆலயத்தில் சுமங்கலிவரம், திருமணவரம் வேண்டி 108 திருவிளக்கு பூஜை செய்து பெண்கள் வழிப்பட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூங்கில் தோட்டம் கிராமத்தில் பழமையான ஸ்ரீ ராஜமாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் 13 ஆம் ஆண்டு சம்வஸ்தர அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பெண்கள் 108 குத்துவிளக்குகள் வைத்து சுமங்கலி பாக்கியம் வேண்டியும், கன்னி பெண்கள் திருமண வரம் வேண்டியும், ஊர் செழிக்கவும் மஞ்சள், குங்குமம் மற்றும் மலர் கொண்டு சிறப்பு பூஜைகளை செய்தனர். தொடர்ந்து, திருவிளக்குக்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் திருவிளக்கை ஏந்தியபடி ஆலயத்தை சுற்றி வந்து வேண்டுதலை நிறைவேற்றிதர ஸ்ரீ ராஜமாரியம்மனை வனங்கி பிராத்தனை செய்தனர். பின்னர் ஸ்ரீ ராஜமாரியம்மன் அம்பாள் வீதியுலா காட்சி நடைபெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story