குழந்தை கடத்தல் வதந்தியை பொதுமக்கள் நம்பாதீர் காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

குழந்தை கடத்தல் வதந்தியை பொதுமக்கள் நம்பாதீர் காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு

காவல்துறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் குறித்து வரும் தகவல் பொய்யானவை இதுவரை குழந்தை கடத்தல் என எந்த புகார் வரவில்லை பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்-மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அறிவிப்பு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தை கடத்தல் பற்றி வரும் தகவல் அனைத்தும் உண்மைக்கு மாறானது. இதுவரை குழந்தைகள் காணாமல்போனது மற்றும் கடத்தப்பட்டது பற்றிய எந்த ஒரு புகாரோ, தகவலோ வரவில்லை. எனவே பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை. குழந்தைகள் கடத்துவதாக வரும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் போலியானவை. பொய்யான செய்திகளை சமுக வலைதளங்களில் யாரும் பரப்பவேண்டாம். மேலும், அவ்வாறு பரப்புவர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா அறிவிப்புவிடுத்துள்ளார். மேலும், பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அவசர உதவி எண் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுபாட்டு அறை 04364- 240100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story