தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் பதவியேற்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் பதவியேற்பு

புதிய மேலாண் இயக்குநர் பதவியேற்பு

குறித்த காலத்தில் நேரடி நெல்கொள் முதல் நிலையம் திறக்காத தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மயிலாடுதுறை மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 1,70,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி செய்துள்ளனர். இதன் அறுவடை ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கியது. இடையில், 3 நாள்கள் மழை பெய்த நிலையில், பொங்கல் பண்டிகை முடிந்து அறுவடை மீண்டும் சூடுபிடித்தது. தற்போது வரை சுமார் 10 சதவீத அறுவடைப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க ஜனவரி 12-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆணை பிறப்பித்தார்.

தொடர்ந்து, மாவட்டத்தின் முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தரங்கம்பாடி வட்டம் காளகஸ்திநாதபுரத்தில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் ஏனைய கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா அறுவடை தொடங்கி 15 நாள்களை கடந்தும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாத விவகாரத்தில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, மயிலாடுதுறை நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் வீ.திருப்பதி திருச்சிராப்பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் திருச்சிராப்பள்ளி அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் காலியாக உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மற்றும் மேலாண் இயக்குனர் பணிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்கும் அதிகாரி துரிதமாக செயல்பட்டு மாவட்டத்தின் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாக திறந்து விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story