திமுகவின் திறமையற்ற நிர்வாகத்தால் தமிழகம் பின்னோக்கி செல்கிறது - எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு

திமுகவின் திறமையற்ற நிர்வாகத்தால் தமிழகம் பின்னோக்கி செல்கிறது - எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு
பிரச்சாரம்
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக தங்கவேல் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் கரூர்- மதுரை புறவழிச்சாலையில், கோடங்கிபட்டி பகுதியில் திறந்தவெளி மைதானத்தில் பிரச்சாரக் பொதுக்கூட்டம் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, தமிழகத்தில் அரிசி கிலோ ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது.

மளிகை பொருட்கள் நான்கு சதவீதம் உயர்ந்துள்ளது. மின் கட்டணம் 52% உயர்ந்துள்ளது. வீட்டு வரி நூறு சதவீதம் உயர்ந்துள்ளது. வேளாண்மை, ஜவுளி உள்ளிட்ட மூன்று துறைகள் நலிவடைந்து வருவதற்கான காரணம் திமுக அரசின் திறமையற்ற நிர்வாகம் தான். இதனால் தமிழகம் பின்னோக்கி செல்கிறது என தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story