தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு பொதுக்குழு கூட்டம்

கரூரில் நடந்த தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில், தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு பொதுக்குழு கூட்டம் அமைப்பின் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் அண்ணா குபேரன் சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மோகன்ராஜ், செயலாளர் பாஸ்கர், மாவட்ட துணை தலைவர் செல்வராணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ,அரசின் புதிய திட்டங்களை நிறைவேற்றிட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் நவீன மனு நில அளவை திட்டம், தரம் இறக்கப்பட்ட அலுவலர் பதவிகளை தரம் உயர்த்திட வேண்டும். நில அளவு களப்பணியாளர்களின் உட்பிரிவு செய்யும் நடைமுறையில் விதி திருத்தம் செய்யப்பட்ட அஅரசு ஆணையை ரத்து செய்து, உட்பிரிவு செய்யும் அதிகாரத்தை வழங்க வேண்டும். ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். கூடுதல் இயக்குனருக்கு அதிகாரம் வழங்கிட வேண்டும். அரசாணை எண் 297 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story