டிட்டோஜாக் மறியல் போராட்டம் - கைது செய்த காவல்துறையினர்.
கரூர், தாந்தோணி மலை அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோஜாக் சார்பில், அரசாணை 243ஐ ரத்து செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையான, அரசாணை 243 ரத்து செய்ய வலியுறுத்தியும், பதவி உயர்வு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு முடியும் வரை, மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து காவல் வாகனத்திலும், அரசு பேருந்திலும் தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.