மயிலாடுதுறை மாவட்ட அரசு பேருந்துகளில் சோதனை நிறைவு
அரசு பேருந்து ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து இயக்கப்படும் 140-க்கு மேற்பட்ட அரசுப் பேருந்துகளில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.
திருச்சியில் கடந்து சில நாள்களுக்கு முன்பு நகர பேருந்தின் இருக்கை பெயர்ந்து பேருந்தின் வெளியே விழுந்து நடத்துனர் காயம் அடைந்த சம்பவத்தைத்தொடர்ந்து அனைத்து அரசு பேருந்துகளிலும் 48 மணி நேரத்துக்குள் முழுமையான ஆய்வு நடத்த தலைமைச் செயலர் சிவ்தாஸ்மீனா உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் 3 மாற்றுப் பேருந்துகள் உள்ளிட்ட 73 பேருந்துகளிலும் சோதனை நடத்தப்பட்டது. கும்பகோணம் துணை மேலாளர் (சிவில்) ராஜேந்திரன், மயிலாடுதுறை பணிமனை மேலாளர் எஸ்.வடிவேல் ஆகியோர் பணிகளை ஆய்வு செய்தனர். இதேபோல், சீர்காழி பணிமனையில் இருந்து இயக்கப்படும் 41 பேருந்துகள், பொறையார் பணிமனையில் இருந்து இயக்கப்படும் 26 பேருந்துகள் என மொத்தம் 140-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் முழுமையாக சோதனைக்கு உள்படுத்தப்பட்டன.
Next Story