தோற்றுப் போனாலும் தொகுதிக்காக குரல் கொடுப்பவர் தம்பிதுரை -விஜயபாஸ்கர்

அதிமுக தேர்தல் பிரசாரம்



கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் வேட்பாளர் தங்கவேலுடன் இன்று கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோதூர், கோதூர் காலனி வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். பிரச்சாரத்திற்கு சென்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வேட்பாளர் தங்கவேல் மற்றும் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் பேசிய எம் ஆர் விஜயபாஸ்கர், கடந்த முறை கரூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம் பி யாக இருந்தது யார் என்று உங்களுக்கு தெரியுமா? என பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்பினர். இதுகுறித்து கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறையில் சென்று கேட்டபோது, அங்குள்ள மக்கள் கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற தம்பிதுரை தான் எம்பி என கூறினர்.
ஏனென்றால், அந்த அளவுக்கு கடந்த முறை வெற்றி பெற்ற ஜோதிமணி தொகுதி பக்கமே கடந்த முறையும் செல்லவில்லை. இப்போது நடக்கின்ற தேர்தலுக்கு ஓட்டு கேட்கவும் செல்லவில்லை.என கூறியதாக தெரிவித்தார். மேலும், அந்த தொகுதியில் எம்பி மற்றும் எம்எல்ஏ கடந்த ஐந்து வருடங்களாக செல்லாததால், காலியாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்ததாக கூறினார். முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை நான்கு முறை தேர்தலில் நின்று ஜெயித்து கடந்த முறை தோற்றுவிட்டாலும் தற்போது ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, ராஜ்ய சபாவில் கரூர் தொகுதிக்காக குரல் எழுப்பி வருகிறார் என்றார்.
ஜோதிமணி வெற்றி பெற்றால்,அவர் கரூர் தொகுதியில் தங்க மாட்டார். நேராக டெல்லிக்கு சென்று விடுவார். எனக்கூறி ராகுல் காந்தி நடைபயணத்தில் ஜோதிமணி பங்கேற்ற புகைப்படத்தை காட்டினார். மேலும், அங்கு சென்று நடந்ததை விட, தொகுதிக்குள் நடந்திருந்தால் மக்கள் தானாகவே ஓட்டு போட்டு இருப்பார்கள். எனவே, அதிமுக வேட்பாளரான தங்கவேலுக்கு உங்கள் ஆதரவை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.




