மிதிவண்டியில் அலுவலகம் சென்ற கூடுதல் ஆட்சியர்

மிதிவண்டியில் அலுவலகம் சென்ற கூடுதல் ஆட்சியர்

மிதிவண்டியில் அலுவலகம் சென்ற கூடுதல் ஆட்சியர்

மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்ட கூடுதல ஆட்சியர் ஷபீர் ஆலம் மிதிவண்டியில் அலுவலகம் சென்றார்.
வாகனங்கள் பெருக்கத்தால் ஏற்படும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க அரசு அதிகாரிகள் அலுவலர்கள் ஊழியர்கள் என அனைவரும் மாதத்தில் ஒரு நாள் வாகனத்தில் செல்லாமல், அரசு பேருந்திலும், நடைப்பயணமாகவும், சைக்கிளிலும் அலுவலகம் செல்ல தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அவ்வகையில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் மு.ஷபீர்ஆலம் தனது முகாம் அலுவலகத்தில் இருந்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்துக்கு மிதிவண்டியில் சென்று பங்கேற்றார். மாதத்தில் ஒருநாள் இதுபோல் அனைத்து அதிகாரிகளும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் வாகனத்தை பயன்படுத்தாமல் பேருந்திலும் நடை பயணமாகவும் அலுவலகத்திற்கு சென்றால் வாகனத்தின் மூலம் ஏற்படும் புகை குறைவதால் காற்று மாசு குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றும் எரிபொருள் சிக்கனமாகும் என்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் ஊழியர்கள் பொதுமக்கள் அதிக அளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூடுதல் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story