மாவட்ட மைய நூலகத்திற்கு இடம் கிடைக்காமல் அவதி

மாவட்ட மைய நூலகத்திற்கு இடம் கிடைக்காமல் அவதி

கோரிக்கை மனு


மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு தேவையான இடம் அளிக்க மாவட்ட ஆட்சியிடம் முன்னாள் எம்எல்ஏ கோரிக்கை

மயிலாடுதுறை தமிழகத்தின் 38வது மாவட்டமாக கடந்த 2020 டிசம்பர் 28ஆம் தேதி உருவாகியது. ஆட்சிபொறுப்பிற்கு வந்த திமுக அரசு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 114 கோடி ரூபாய் நிதியில் கட்டி வருகிறது . அதேபோன்று புதிய மாவட்டத்திற்கான மாவட்ட மைய நூலகம் 30ஆயிரம் சதுர அடியில் கட்டுவதற்கு 6 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது.

கடந்த ஓராண்டாக கட்டிடம் கட்டுவதற்கு தேவையான இடம் கிடைக்காமல் பொது நூலகத் துறையினர் தவித்து வருகின்றனர். நூலகத்திற்காக மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தும், தேவையான அளவு இடம் கிடைக்கவில்லை. மயிலாடுதுறை நகராட்சி அருகில் உள்ள பழைய மகப்பேறு மருத்துவமனையையொட்டி காலி இடம் உள்ளது.

அந்த இடத்தில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு 30 ஆயிரம் சதுர அடியை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குத்தாலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணம் திராவிட கழக மாவட்ட தலைவர் தளபதி ராஜ் மற்றும் பொதுநல அமைப்பினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மனு அளித்துள்ளனர்.

Tags

Next Story